கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்ப மனு

priyanka congress kanyakumari
By Jon Mar 05, 2021 02:23 PM GMT
Report

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரம் 6ம் தேதி நடைபெறவுள்ளது, இதற்கான தொகுதி பங்கீடு, தேர்தலில் போட்டியிடும் நபர்களிடமிருந்து விருப்ப மனு பெறுவது என ஒவ்வொரு அணியும் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகள் தவிர்த்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்டதால் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியிடுவாரா அல்லது தி.மு.க போட்டியிடுமா என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.