பிரியங்கா காந்தி உடன் சென்ற கார்கள் விபத்துக்குள்ளானது!
ராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. டெல்லியில் குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி சென்ற டிராக்டர் விபத்துக்குள்ளாகி மரமடைந்தார்.
விவசாயியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, ராம்பூருக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அவரது வாகனத்தின் பின்னே போலீசார், கட்சி நிர்வாகிகள் வாகனம் அணி வகுத்துச் சென்றன.
ஹாபூர் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.