Tuesday, Jul 8, 2025

அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா - வரலாற்று வெற்றி!

Indian National Congress Rahul Gandhi Kerala Priyanka Gandhi Wayanad
By Sumathi 8 months ago
Report

பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.

பிரியங்கா காந்தி 

2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

rahul gandhi with priyanka gandhi

தொடர்ந்து வயநாடு தொகுதியில் இருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி, கடந்த 13ம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிரா தேர்தல்; ஆட்சியை கைப்பற்றுமா பாஜக? அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிரா தேர்தல்; ஆட்சியை கைப்பற்றுமா பாஜக? அடுத்த முதல்வர் யார்?

வரலாற்று வெற்றி

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, எல்டிஎஃப் கூட்டணி சார்பில் சத்யன் மோகரி, என்டிஏ சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிட்டனர்.

அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா - வரலாற்று வெற்றி! | Priyanka Gandhi Beats Rahuls Record Wayanad

இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில், பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்து வருகிறார்.

நடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.