மேடையில் நடிகர் கமல்ஹாசன் அருகில் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய ப்ரியங்கா - வைரலாகும் வீடியோ

Priyanka Deshpande
By Nandhini Jun 03, 2022 11:11 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்தவர் தான் ப்ரியங்கா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனையடுத்து, ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட ப்ரியங்காவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் இன்னும் ரசிகர் பட்டாளம் கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்றதால், விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியை மாகாபாவும், மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தனர். ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ப்ரியங்கா ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சிக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அப்போது, ப்ரியங்கா மேடையில் இருந்த நடிகர் கமலிடம் சென்று அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது ப்ரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, அம்மா... ஹாய்... என்று கூச்சல் போடுகிறார். அப்போது மா.க.பா கலைக்க, என்னிடம் ஏற்கெனவே, கமல் சாரும்.. நானும் அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்று உள்ளது.

இப்போது மறுபடியும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறி கமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.