சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கதறி அழுத பிரியங்கா - வைரலாகும் வீடியோ
மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ள தொகுப்பாளர் பிரியங்கா அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தாமரையுடான சண்டை, அபிஷேக் உடனான நட்பில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். அதுவரை பிரியங்காவின் சிரிப்பை மட்டுமே பார்த்த ரசிகர்கள் முதன் முறையாக பிரியங்காவின் அழுகை, கோபம், சண்டை என அனைத்தையும் ஒரு சேர பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே சீசன் 5-ல் ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை மீண்டும் ஆங்கர் செய்யும் பணியில் களம் கண்ட பிரியங்கா சூப்பர் சிங்கரில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அதில் பிரியங்காவை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் குட்டி ரசிகையும், சூப்பர் சிங்கர் போட்டியாளரான சிறுமி ஒருவர் கண்னீர் விட்டு அழுகிறார். இதை பார்த்த பிரியங்காவும் நெகிழ்ச்சியில் அழுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.