200 கோடியில் வைர நெக்லெஸ் அணிந்துவந்த பிரியங்கா சோப்ரா - கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

Priyanka Chopra New York Viral Photos
By Sumathi May 03, 2023 06:58 AM GMT
Report

நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸின் குறித்த விவரம் வைரலாகி வருகிறது.

பிரியங்கா சோப்ரா

நியூயார்க்கில் மெட் காலா பேஷன் ஷோ நடைபெற்றது. இது நிதி திரட்டும் நிகழ்ச்சியாகும். இதில் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 3வது முறையாக கலந்துக்கொண்டார்.

200 கோடியில் வைர நெக்லெஸ் அணிந்துவந்த பிரியங்கா சோப்ரா - கவனம் ஈர்க்கும் புகைப்படம்! | Priyanka Chopras Diamond Necklace Viral

இந்த முறை அவர் தனது கணவர் நிக் ஜோனாஸ் உடன் ஜோடியாக கேட் வாக் செய்து வந்தார். இதில், அவர் அணிந்து வந்திருந்த அழகிய வாலண்டினோ ஆடை மற்றும் புகழ்பெற்ற பல்கேரி நிறுவனத்தின் 11.6 காரட் வைர நெக்லஸ் ஆகியவை கவனம் பெற்றன.

பேஷன் ஷோ

ப்ளூ லகுனா வைரம் பதிக்கப்பட்ட அந்த நெக்லஸ் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.204 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த நெக்லெஸ் மெட்காலா 2023 நிகழ்வுக்குப் பிறகு ஏலம் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவருக்கு மாடலிங் துறையின் மீது ஆர்வம் அதிகம். அதனால் அடிக்கடி பேஷன் ஷோவில் கலந்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.