உக்ரைன் மக்களை சந்தித்த பிரியங்கா சோப்ரா : வைரலாகும் புகைப்படம்

Ukraine Priyanka Chopra Viral Photos
By Irumporai Aug 03, 2022 09:11 PM GMT
Report

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பிரியங்கா

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. 

உக்ரைன் மக்களை சந்தித்த பிரியங்கா சோப்ரா : வைரலாகும் புகைப்படம் | Priyanka Chopra Visit Ukraine People Place

கடந்த 2018-ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

உக்ரைன் மக்களை சந்தித்த பிரியங்கா

சமீபத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போரினால் உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இவர்களுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என்று குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா, அதற்கான நன்கொடையும் திரட்டி வந்தார். 

உக்ரைன் மக்களை சந்தித்த பிரியங்கா சோப்ரா : வைரலாகும் புகைப்படம் | Priyanka Chopra Visit Ukraine People Place

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, போலந்து நாட்டில் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள உக்ரைன் நாட்டு மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.