இதனால் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றேன் - பிரபல நடிகை ஷாக் தகவல்
நடிகை ப்ரியங்கா சோப்ரா வாடகைத் தாய் மூலம் தாயானது பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா
உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல இந்திய நடிகையுமான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி, கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பெண் குழந்தை பெற்றடுத்ததாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து ப்ரியங்கா சோப்ரா கூறியதாவது, எனக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் தாயாக முடியவில்லை.
வாடகைத் தாய்
இதையடுத்தே வாடகைத் தாயை நாடினேன். எனக்கு வேறு வழியில்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பாக்கியம் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன். எங்களின் வாடகைத் தாய் மிகவும் அன்பானவர். எங்கள் பிள்ளையை 6 மாதங்கள் பாதுகாத்தார்.
உங்களுக்கு என்னை பற்றி தெரியாது. எனக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது. என்னுடைய மற்றும் என் மகளுடைய உடல்நலம் பற்றி நான் வெளியே தெரிவிக்காததால், பொது மக்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இல்லை என்றார். மால்தி மேரி குறை மாதத்தில் பிறந்தார் என வேதனை தெரிவித்துள்ளார்.