சமந்தாவை தொடர்ந்து கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகை? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

priyankachopra
By Petchi Avudaiappan Nov 22, 2021 04:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து உலகளவிலான திரையுலகில் தடம் பதித்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 

இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தவறுவதில்லை. அடிக்கடி கணவருடன் நேரத்தை செலவழிக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் சேர்ந்து வீடு வாங்கினர். அந்த வீட்டில் தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடிய அவர்கள் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் கணவரின் சர் பெயரான ஜோனஸை பிரியங்கா சோப்ரா சேர்த்திருந்தார் .

இந்நிலையில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென அவர் நீக்கியுள்ளார்.இதனைப் பார்த்த அவரது ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

காரணம் கடந்த மாதம் நடிகை சமந்தா தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அதற்கு சில நாட்கள் முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்த்திருந்த  இருந்து கணவரின்  குடும்ப பெயரை நீக்கியிருந்தார். அதனால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.