உள்ளாடையை காட்ட சொன்னார் - இயக்குனரால் மனம் நொந்த பிரபல நடிகை!

Priyanka Chopra
By Sumathi May 25, 2023 02:30 PM GMT
Report

நடிகை பிரியங்கா சோப்ரா இயக்குனர் குறித்து பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.

உள்ளாடையை காட்ட சொன்னார் - இயக்குனரால் மனம் நொந்த பிரபல நடிகை! | Priyanka Chopra Recalls Dehumanizing Experience

அமெரிக்காவில் வசித்து வருவதுடன் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில், தனது மோசமான திரையுலக அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

 மனிதாபிமானம்?

``நான் ஓர் ஆணை மயக்கும் அண்டர்கவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அவரை மயக்கும் சமயத்தில், ஒரே நேரத்தில் ஓர் ஆடையைக் கழற்ற வேண்டும். எனக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆடை இருக்க வேண்டும் (Layer up) என விரும்பினேன்.

உள்ளாடையை காட்ட சொன்னார் - இயக்குனரால் மனம் நொந்த பிரபல நடிகை! | Priyanka Chopra Recalls Dehumanizing Experience

படத் தயாரிப்பாளர், `இல்லை, நான் அவளுடைய உள்ளாடைகளைப் பார்க்க வேண்டும். இல்லையேல், இந்தப் படத்தைப் பார்க்க மற்றவர்கள் ஏன் வருவார்கள்' என்றார். இதை அவர் என்னிடம் சொல்லாமல், அவர் அதை என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் கூறினார்.

அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம். எனது கலை முக்கியமல்ல, நான் என்ன பங்களிக்கிறேன் என்பது முக்கியமல்ல. நான் ஒன்றுமில்லாதவள் என்று உணரச் செய்த சம்பவம் அது ’’ என வேதனை தெரிவித்துள்ளார்.