மனைவிக்கு அன்பு முத்தம்: விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ராவின் கணவர்
பிரபல நடிகை சமந்தாவை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவிருக்கிறார் என புரளி கிளம்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவரது கணவரான நிக் ஜோனஸ்.
2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002ம் ஆண்டு தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட் நாயகியாக வலம் வந்தவருக்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்தது.
அங்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் பிரபலமடைந்த பிரியங்கா சோப்ரா, 2018ம் ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகின, காரணம் பிரியங்கா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த ஜோனஸை நீக்கியது தான்.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய மனைவியை முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நிக் ஜோனஸ்.