பிரியங்கா சோப்ரா , நிக் ஜோன்ஸ் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பு

baby priyankachopra nickjonas
3 மாதங்கள் முன்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதி வாடகை தாய் மூலம் தாங்கள் பெற்றோர்களாக மாறி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.   

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் நிக் ஜோனஸ் தம்பதிகள் அவர்களது ரசிகர்களுக்கு தாங்கள் பெற்றோர்களாக மாறி உள்ளோம் என்ற சந்தோஷமான செய்தியை தெரிவித்துள்ளனர்

வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். "வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றதில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்.

இந்த சமயத்தில் எங்கள் குடும்பத்துடன், நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.  

சில மாதங்களுக்கு முன் குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புவதாக பிரியங்கா சோப்ரா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். எங்கள் இருவருக்கும் குழந்தையை வளர்க்க விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் இன்டர்நேஷனல் சிங்கர் நிக் ஜோனஸ் இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பிரியங்கா சோப்ரா தற்போது ஜோயா அக்தர் தயாரிப்பில் கேத்ரினா கைப் மற்றும் ஆலியா பட் நடிக்கும் ஜி லீ ஜாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகவுள்ளது   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.