100 நாட்களாக ஐசியூவில் இருந்த பிரபல நடிகையின் குழந்தை - புகைப்படம் வெளியிட்டு உருக்கம்!

Priyanka Chopra
By Swetha Subash May 09, 2022 01:01 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சியமானார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார்.

100 நாட்களாக ஐசியூவில் இருந்த பிரபல நடிகையின் குழந்தை - புகைப்படம் வெளியிட்டு உருக்கம்! | Priyanka Chopra Daughter Spent 100 Days In Icu

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக் கொண்டனர் பிரியங்கா-நிக் தம்பதி.

இதனையடுத்து அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியும், நிக் ஜோன்ஸ் குழந்தையின் கையைப் பிடித்தபடியும் உள்ளனர். குழந்தையின் முகத்தை ஹார்ட் எமொஜி மூலம் மறைத்துள்ளனர்.

அந்த பதிவில், “இந்த அன்னையர் தினத்தில் கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமாக காலத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. 100 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டில் இருக்கிறார்.

குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என்பது தெளிவாகிறது. சிகிச்சையளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது” என தெரிவித்துள்ளனர்.