முகத்தில் காயங்கள் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

Priyanka Chopra
1 மாதம் முன்

முகத்தில் காயங்களுடன் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர், உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல இந்திய நடிகையுமான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர், கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் வசித்து வருவதுடன் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி, கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பெண் குழந்தை பெற்றடுத்ததாக சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில், திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

முகத்தில் காயங்கள் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | Priyanka Chopra Bruised Face Leaves Fans Confused

மேலும் குழந்தை உடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என தெளிவாக தெரிகிறது என்று பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி தெரிவித்திருந்தனர். தனது குழந்தை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே, படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டுள்ளார்.

‘சைட்டடல்’ என்ற சயின்ஸ் பிக்ஷன் அமெரிக்க தொலைக்காட்சி தொடரை, பிரபல நடிகரான ரிச்சர்டு மேடன் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா தயாரித்து வருகிறார்.

முகத்தில் காயங்கள் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | Priyanka Chopra Bruised Face Leaves Fans Confused

இந்த நிலையில் முகத்தில் காயங்களுடன் இருந்ததை அடுத்து, பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் குழப்பமான நிலையில், உண்மையில் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.

மேலும், ‘சைட்டடல்’ தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது என தெரிந்ததும் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.