பிரபல இயக்குநரிடம் அடிவாங்கிய நடிகை ப்ரியாமணி - பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை
தன்னுடைய முதல் படல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ப்ரியாமணி 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் ஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை ப்ரியாமணி கண்களால் கைது செய்' படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். ஆரம்பத்தில் நான் இந்தப்படத்தில் நடிக்க ரொம்பவே பயந்தேன். பாரதிராஜா முன்கோபக்காரர். அவருக்கு ரொம்ப சீக்கிரமாகவே கோபம் வந்திடும். ஏனென்றால் அவருடைய திரைப்படம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். எனவே அவரிடம் அடி வாங்குவது அதிர்ஷடமே என ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் 'பருத்திவீரன்' படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.