எனக்கு சென்னை அணி வேண்டாம் - பிரபல வீரர் சொன்ன கருத்தால் பரபரப்பு
2022 ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட விருப்பம் என்ற கேள்விக்கு ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரருமான பிரியம் கர்க் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
பத்து அணிகளை கொண்டு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள எந்தெந்த வீரர்கள் எந்த அணிகளில் இணையப் போகிறார்கள் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே 2020ஆம் ஆண்டு 1.90 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரியம் கர்க் நடப்பாண்டு ஏலத்தில் தனது ஆரம்ப விலையாக ரூ.20 லட்சம் என நிர்ணயித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பிரியம் கர்க் மீண்டும் தான் ஹைதராபாத் அணிக்காக விளையாடினால் மகிழ்ச்சியடைவேன் என தெரிவித்துள்ளார். ஏனென்றால் நான் அவர்களுடன் இரண்டு வருடங்கள் இருந்துள்ளேன், அவர்களிடமிருந்து நிறைய அனுபவங்களை கற்றுள்ளேன். மேலும் அவர்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பு உள்ளத எனவும் கர்க் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் சென்னை அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்பியது குறிப்பிடத்தக்கது.