டிடிக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு; தொழிலதிபருடன் 2வது திருமணம் - உண்மை உடைத்த அக்கா!

Tamil Cinema Star Vijay Dhivyadharshini Marriage
By Sumathi Feb 17, 2024 08:17 AM GMT
Report

டிடியின் திருமணம் குறித்து அவரது அக்கா பிரியதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்.

 திவ்யதர்ஷினி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

dhivya dhrshini dd

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரை தான் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கனும் - சீக்ரெட் உடைத்த டிடி!

அவரை தான் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கனும் - சீக்ரெட் உடைத்த டிடி!

2வது திருமணம்?

இந்நிலையில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி அளித்த பேட்டி ஒன்றில், டிடிக்கு அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. அது போதாத குறைக்கு அவளுடைய காலிலும் பிரச்சனை இருக்கிறது. ஆனாலும் டிடி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை செய்து கொண்டே தான் இருக்கிறார்.

dd with sister

உண்மையில் டிடி செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய விஷயம். டிடிக்கு அடுத்த திருமணம் எப்போது என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவருடைய மனம் சார்ந்தது அதை நாங்கள் கட்டாயப்படுத்தி இதை செய் என்று சொல்ல முடியாது.

டிடி வெளியே செல்லும்போது என்னுடைய மகன் கூட செல்லும்போது கூட சிலர் டிடி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அவர் இவர் தான் என்று புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்கள். என்னுடைய மகனோடு டிடி இருக்கும் புகைப்படத்தையும் இவர்கள் இப்படி எல்லாம் பயன்படுத்தி வருவதை பார்க்கும் போது கடுப்பாகத்தான் இருக்கிறது. ஏதாவது நல்ல விஷயம் என்றால் நாங்களே சொல்லுவோம் எனத் தெரிவித்துள்ளார்.