அடுத்தடுத்து பிரபல நடிகருடன் மீண்டும் நடிக்கும் பிரியா மோகன்

tamil actress flim hero
By Jon Jan 30, 2021 09:04 AM GMT
Report

தெலுங்கில் பிரபல நடிகையான பிரியா மோகன் தற்போது தமிழில் முன்ணி நடிகர்களோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா மோகன் நடித்து வருகிறார்.

அதனையடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பிரியா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகவுள்ளார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இதனை அட்லீ உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு டான் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.