மாணவி பிரியா மரணம் வழக்கு - மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

Chennai Crime
By Irumporai Nov 19, 2022 03:58 AM GMT
Report

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பிரியா மரண வழக்கு

பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர்.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என தெரிவித்த பெரவள்ளூர் போலீசார் மருத்துவர்களை தேடி வருகின்றனர்.

மாணவி பிரியா மரணம் வழக்கு - மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு | Priya Death Case 3 Separate Team Doctors

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

தனிப்படை அமைத்து போலீசார் தேடல்

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.