மேகமோ அவள் மாய பூ திரள் : ப்ரியா பவானிசங்கர் வெளியிட்ட வேற லெவல் ஒர்க்கவுட் வீடியோ
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கர், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் “கல்யாணம் முதல் காதல் வரை” எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானார்.
இதனைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் திரைப்படம் மூலம் இந்திய திரைப்படக் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்கு பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா சாப்டர்1 போன்ற திரைப்படங்களில் சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடி யில் வெளியான 'Oh Manapenne’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னணி நடிகையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிம்புவின் ’பத்து தல’ அருண் விஜய்யின் ’யானை’ உள்பட கிட்டத்தட்ட 10 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலை தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர்.
தற்போது அவர் செய்த வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் 360 கிலோ எடையை அவர் அசால்ட்டாக ஹேண்டில் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.