டீச்சருக்கு டாட்டா காட்டிய காதலன் - கெட்டி மேளம் கொட்ட வைத்த போலீசார்..!
5 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஆசிரியை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்தனர் போலீசார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ஆனந்தராஜ் MBA., அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா மகள் நாகவல்லி பட்டதாரியான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார்.
இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து (உல்லாசமாக) இருந்து வந்ததாகவும். இந்த நிலையில், இவர்களுடைய காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது.
ஆனந்தராஜின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நாகவல்லியை திருமணம் செய்து கொள்ள ஆனந்தராஜ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாகவல்லி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தடைந்து " 5 ஆண்டு காலமாக ஆனந்தராஜ் தன்னை காதலித்து,
திருமணம் செய்து கொள்ள அவருடைய பெற்றோரின் பேச்சை கேட்டுக் கொண்டு காதலன் ஆனந்தராஜ் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆனந்தராஜ் அவருடைய பெற்றோரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பிறகு,காதலன் ஆனந்தராஜ் நாகவல்லியை திருமணம் செய்ய சம்மதித்த நிலையில். எம்ஜிஆர் நகரில் உள்ள அருள்மிகு வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் ஆனந்தராஜ் - நாகவல்லி காதலர்கள் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட இருவரையும் உறவினர்கள் மலர் தூவி வாழ்த்தினர்.