இணையவழிக்கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளை - சீமான் காட்டம்!

seeman problem request fees private school
By Anupriyamkumaresan Jul 07, 2021 08:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

இணையவழிக்கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே, ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர்.

இணையவழிக்கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளை - சீமான் காட்டம்! | Private School Fees Problem Seeman Request Govt

இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா ஊரடங்குக்காலத்தில் இணையவழியில் கல்வி பயிற்றுவித்து வரும் தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுவருவதாகப் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அது குறித்துத் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவருக்கான இணையவழி கல்விக்கட்டணமாக, மொத்தக் கல்விக்கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே வசூலிக்க வேண்டுமென்று கடந்த ஆண்டுச் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையே, இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்த பிறகும்கூட, தனியார் பள்ளிகள் மிக அதிகக்கட்டணங்களைப் பெற்றோர்கள் மீது திணிப்பது மிகப்பெரும் முறைகேடாகும் என்றும், அதிகக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.