படுக்கை வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவலம்... வேலூரில் பரபரப்பு!

bed vellore gvthoaspitals
By Irumporai May 12, 2021 11:38 AM GMT
Report

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலென்சுகள் நோயிளிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் இதய நோய், மூச்சுத்திணரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வந்திருந்தவர்கள். நீண்ட நேரம் காத்திருந்தும் படுக்கை கிடைக்காததால் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து நோயாளியின் உறவினர் ஒருவர் கூறுகையில்:

நாங்கள் கடந்த 1 மணி நேரத்திற்க்கு மேலாக காத்துக்கொண்டிருக்கிறோம் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படுக்கை கிடைக்க தாமதம் ஆகும் என்றும் மற்ற நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பிறகே படுக்கை கிடைக்கும் என கூறுகின்றனர்.

ஆகவே நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றும் கூறினர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது (ARMO) மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளது அதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் ஆகும்.

இது அனைத்திலும் தற்போது நோயாளிகள் உள்ளனர். இந்த முறை கொரோனா நோயாளிகள் மட்டும் இன்றி மற்ற நோயாளிகளும் அதிகம் மூச்சுத்திணறல் காரணமாக வருகிறார்கள்.

படுக்கை வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவலம்... வேலூரில் பரபரப்பு! | Private Hospital Bed Facilities Vellore

ஆகவே அனைவருக்குமே ஆக்சிஜன் இணைப்பு தேவைப்படுகிறது. இதனால் தான் நோயாளிகளை காக்க வைப்பதற்க்கான சூழல் உருவாகிவருகிறது.

தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகளை அமைத்து வருவதாக கூறினர்.

இவைகள் உருவாக்கப்பட்ட பின்பு நோயாளிகள் காத்திருப்பு நிலை தடுக்கப்படும்.  என்றும் தெரிவித்தனர்.