இனி கண்டிப்பாக தமிழில் பலகை வைக்க வேண்டும்.. ரூ.2000 அபராதம் - தனியார் நிறுவனத்திற்கு அதிரடி அறிவிப்பு!

Tamil nadu Madras High Court
By Vinothini Sep 02, 2023 07:59 AM GMT
Report

தனியார் நிறுவனங்கள் தமிழில் பலகை வைக்கவேண்டும், இல்லையென்றால் ரூ.2000 அபராதம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மனு

தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் மனு தாக்கல் செய்தார்.

private-companies-fined-if-name-board-not-in-tamil

இது தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனு தற்பொழுது விசாரணைக்கு வந்தது.

அரசு அறிவிப்பு

இந்நிலையில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

private-companies-fined-if-name-board-not-in-tamil

தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.