சென்னையில் தனியார் நகரப் பேருந்துக்கு அனுமதி - கொந்தளிப்பில் அரசுப் பேருந்து ஊழியர்கள்

Tamil nadu Government of Tamil Nadu Chennai
By Thahir Mar 05, 2023 09:20 AM GMT
Report

சென்னையில் தனியார் நகர பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனியார் நகரப்பேருந்துகளுக்கு அனுமதி 

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு 3,000 மேற்பட்ட மாநகர பேருந்துகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதிக்காக தனியார் பங்களிப்புடன் மாநகர பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைக்கு திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் தனியார் நகரப் பேருந்துக்கு அனுமதி - கொந்தளிப்பில் அரசுப் பேருந்து ஊழியர்கள் | Private City Bus Allowed In Chennai

இதன் முதல்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இந்த ஆண்டு இணைத்து சென்னை மக்களுக்கு பேருந்து சேவை செய்யப்படுவதற்கான திட்டமிடல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு பேருந்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பனிமுனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிஐடியூ தெரிவித்துள்ளது