டீசல் தட்டுப்பாட்டால் இலங்கையில் முடங்கியது தனியார் பேருந்து சேவை
இலங்கை அண்மை காலமாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்து உள்ளது.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடுமையாக பாதிக்கபட்டுள்ளதால்,எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி நுவரெலியா தலவாக்கலையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.மேலும் அந்நாட்டில் தனியார் பேருந்து சேவை முடங்கியுள்ளது.