விதியை மீறி இயங்கிய பப் - மீடியா கேமராக்களால் தள்ளாடியபடி பெண்கள் செய்த காரியம்!
நேரக்கட்டுப்பாட்டை மீறி நள்ளிரவில் இயங்கிய பப்பில் இருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர்.
மது விருந்து
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒரு பப்பில் அரசு அறிவித்த நேரக்கட்டுப்பாட்டை மீறி ஆட்டம், பாட்டம் என அதிக சத்தத்துடன் மது விருந்து நடந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து மேலாளரிடம் உடனே பப்பை மூடச் சொல்லியுள்ளனர்.
ஆனால் அவர் மூடாமல் இருந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும் அதனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மது அருந்திக்கொண்டு ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது. மேலும், தாங்கள் பெரிய இடம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.
நள்ளிரவில் பரபரப்பு
இதனையடுத்து ஒரு வழியாக அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் வெளியேற்றியுள்ளனர். அப்போது போதையில் தள்ளாடிய படியே பப்பை விட்டு அவசரமாக வெளியே வந்தவர்களை சில தமிழ் டிவி சேனல்கள் படம்பிடித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெண்கள் துணி, கைக்குட்டை, ஷால் உள்ளிட்டவை கொண்டு முகத்தை மூடி கொண்டனர். சிலர் போதையில் தள்ளாடியபடியே தங்கள் ஆண் நண்பரை கட்டி பிடித்து முகத்தை காட்டாமல் சென்றனர்.
மேலும், போதையிலிருந்த சிலர் "உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் மது அருந்தினோம்' என்று கூறியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.