பிருத்வி ஷாவின் செல்பி வழக்கு - வீரர் சப்னா கில் உட்பட 3 பேருக்கு காவல்... - நீதிமன்றம் அதிரடி...!

Cricket Mumbai
By Nandhini Feb 20, 2023 12:35 PM GMT
Report

பிருத்வி ஷாவின் செல்பி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் சப்னா கில் உட்பட 3 பேரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிருத்வி ஷாவின் செல்பி வழக்கு

கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று இரவு மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே இந்திய கிரிக்கெட் வீரர் சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் ப்ரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுப்பதற்காக சண்டையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கிரிக்கெட் வீரர் சப்னா கில், பிருத்வி ஷாவின் நண்பரின் காரைத் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது- இது குறித்து பிருத்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே பிருத்வி ஷா பயணித்த கார் பேஸ்பால் மட்டையால் தாக்கப்பட்டது. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரைப் பின்தொடர்ந்து விரட்டினர். பணம் கொடுக்காவிட்டால் பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டினர் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் (143, 148, 149, 384, 437, 504, 506) பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் சப்னா கில் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

prithvi-shaw-selfie-sapna-gill

சப்னா கில் உட்பட 3 பேருக்கு காவல்

இந்நிலையில், பிருத்வி ஷா செல்பி வழக்கில் சப்னா கில் உட்பட 3 பேருக்கு மும்பை நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

தற்போது, கிரிக்கெட் வீரர் சப்னா கில் உட்பட 3 பேருக்கு மும்பை நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.