புஜாரா வேண்டாம்...இவர் போதும்..முன்னாள் வீரரின் கணிப்பு
டெஸ்ட் போட்டிகளில் புஜாராவை நீக்கிவிட்டு அவரது இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் சொதப்பிய சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் பும்ரா ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புஜாராவை இனி அணியில் எடுக்கவே கூடாது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புஜாராவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவரது இடத்தை இளம் வீரரான ப்ரித்வி ஷாவிற்கு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

மேலும் பிரித்வி ஷா மிகச்சிறந்த திறமைசாலி. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் பிரித்வி ஷா இல்லையென்றாலும், அவர் வைல்ட் கார்டு சாய்ஸாக இருப்பார் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.