என்னை 537 நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் சேர்த்திருக்காங்க... - மவுனம் கலைத்த பிரித்வி ஷா...!
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
பிரித்வி ஷாவின் செல்பி வழக்கு
கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று இரவு மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் ப்ரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுப்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது பிரித்வி ஷா மறுத்ததால், சப்னா கில்லும், அவரது நண்பரும் பிருத்வி ஷாவின் காரைத் தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வீரர் சப்னா கில் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிரித்வி ஷா செல்பி வழக்கில் சப்னா கில் உட்பட 3 பேருக்கு மும்பை நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
மவுனம் கலைத்த பிரித்வி ஷா
இந்நிலையில், காயம் காரணமாக வாய்ப்பை இழந்த பிரித்வி ஷா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுடன் பிரித்வி ஷா பேசுகையில்,
இந்திய அணியில் தற்போது இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்தேன். ஆனாலும், எனக்கு வாய்ப்பு வரவே இல்லை. தற்போது இந்திய அணிக்கு திரும்பிவிட்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேர்வு குழுவினர் முடிவுக்கு நான் எப்போதும் மரியாதை தருகிறேன். சில வீரர்களுக்கு அவர்கள்தான் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். நான் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன்.
நாம் இவ்வளவு கடின உழைப்பு போட்டும் இந்திய அணில் இடம்பெற முடியவில்லை என்ற ஏக்கம் என்னை மிகவும் பாதித்தது. ஆனால், இப்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றார்.