இரவில் விசாரணை நடத்தக்கூடாது : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
By Irumporai
தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி அவர்கள் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.