விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு : 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகரிக்கும் லாக் அப் மரணங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லாக் அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன அந்த வகையில் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
சிபிஐக்கு மாறிய வழக்கு
மரணமடைந்த ராஜசேகரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. சசிதரனை நியமனம் செய்து சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் : மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!