இலங்கையிலிருந்து தப்பி வந்தமுக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு!

srilanka jailed
By Irumporai Jun 12, 2021 05:55 PM GMT
Report

இலங்கையிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு உதவிய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி தினகரன் பழனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கையிலிருந்து கள்ளதோணி மூலமாக மதுரைக்கு வந்து போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த 23பேருக்கு உதவியதாக மதுரை ரயிலார்நகர் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவரை கியூ பிரிவு போலிசார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து தப்பி வந்தமுக்கிய குற்றவாளி  சிறையில் அடைப்பு! | Prisoner Jailed For Fleeing Sri Lanka

தினகரனின் மகன் அசோக் என்பவரை போலிசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் மதுரையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி தினகரன் பழனியில் உள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசாரால் கைதுசெய்யப்பட்டு பழனி சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொடோ லொக்கா உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகாமிசுந்தரியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.