தமிழ்நாட்டில் மீண்டும் சிறைக்கைதி தப்பி ஓட்டம்; 4 காவலர்கள் இடைநீக்கம்
prisoner escaped from kovai central jail: கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்ட கைது ராகவன் தப்பியோடியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிறைக்கைதிகள் தப்பிக்கும் சம்பவம்
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சிறையிலிருந்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதி, இரு நாட்களில் ஒரு வெளிநாட்டு கைதி உட்பட 2 கைதிகள் அடுத்தடுத்த நாட்களில் தப்பி சென்றனர்.

இருவரும் பிடிபட்ட நிலையில், தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்ட சிறையில் உள்ள 17 கைதிகள் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
31 ஆண்டுகளுக்கு பின்பு அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தப்பி சென்ற சம்பவமாக அமைந்தது.
இந்த சம்பவம் காரணமாக பணியில் இருந்த 9 சிறை காவலர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று தேனி தேக்கம்பட்டி சிறை கண்காணிப்பாளராக இருந்த நாகேஷ்வரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய், பணியில் மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கோவை சிறையிலிருந்து தப்பிய கைதி இந்த நிலையில், இன்று கோவை சிறையிலிருந்து மற்றொரு கைதி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் காவல்நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்கில் ராகவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது நேற்று இரவு சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பி சென்ற கைதி ராகவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைதி ராகவனை அழைத்து சென்ற 4 சிறைக்காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.