தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை ஆதரித்தது திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக.
தீர்மானத்தின் போது முதலமைச்சர் விஜய் உரையாற்றுகையில், இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி. தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது? தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் என்றால் அன்பு, தமிழ் தான் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டுமொத்த உயிர் மூச்சு.
கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.