எத்திராஜ் கல்லூரி முதல்வர் மரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கோதை மறைவு
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் இக்கல்லூரியில் 25 ஆண்டுகளாக வேதியியல் துறை பேராசிரியையாகவும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் முதல்வராகவும் பணியாற்றி வந்த கோதை உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
முதலமைச்சர் இரங்கல்
25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019-ஆம் ஆண்டுமுதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற திருமதி. கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Super Singer Junior: பார்வையற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... இசையமைப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன? Manithan
புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை IBC Tamil