ராணுவ பயிற்சியில் ஈடுபடும் 17 வயதான இளவரசி லியோனோர் - 3 ஆண்டு கால பயிற்சியாம்!
17 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராணுவ பயிற்சி
ஸ்பெயினில் அரியணையில் அமர்வதற்கு முன், வாரிசுகள் ராணுவப் பயிற்சி எடுப்பது அரச கலாச்சாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் அரச குடும்பத்தின் அடுத்த சிம்மாசன வாரிசான இளவரசி லியோனோர் தன்னுடைய 17 வயதில் 3 ஆண்டுகள் ராணுவ பயிற்சியில் இணைந்துள்ளார்.
இளவரசி லியோனருக்கு செப்டம்பர் மாதம் முதல் மூன்று ஆண்டுகள் ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்று ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தன்னுடைய தந்தை மன்னர் பெலிப், ராணி லெடிசியா மற்றும் சகோதரி சோபியா ஆகியோருடன் ஜராகோசாவில் உள்ள ராணுவ அகாடமிக்கு இளவரசி லியோனோர் வந்தடைந்தார்.
இளவரசி பேச்சு
அங்கு தன்னுடைய முதல் ஆண்டை இளவரசி நிறைவு செய்வார். பின்னர் கடற்படை பள்ளியில் இரண்டாம் ஆண்டை தொடருவார். இறுதியாக தனது மூன்றாம் ஆண்டை ஜெனரல் ஏர் அகாடமியில் நிறைவு செய்து ராணுவ பயிற்சியை இளவரசி லியோனோர் முடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இளவரசி ' இந்த ஆண்டை மிகவும் உற்சாகமாக எதிர்கொண்டேன். இருந்தும் தற்போது சற்று பதற்றமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Zaragoza Spain, August 17, Princess Leonor went to military training for next three years ? pic.twitter.com/LHdEzuzjek
— leonor_spainprincess (@leonor_deborbon) August 17, 2023