இளவரசி டயானாவின் உடை ஏலம் - எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா ?
பிரிட்டன் இளவரசி டயானாவின் உடை நியூயார்க்கில் ரூ. 4.9 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயானாவின் உடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய். நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.
அதிக விலைக்கு ஏலம்
சாத்பைஸ் ஏல நிறுவனம் இது குறித்து கூறுகையில் இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991ஆம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்திற்காக அணிந்திருந்தாகவும் அதன்பிறகு 1997ஆம் ஆண்டு ஃபோட்டோஷூட்டுக்காக மீண்டும் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தாகவும் கூறப்படுகிறது
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil