மறைந்தார் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப் (99) காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசி எலிசபெத் ராணியாக அமர்வதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு 1947 இல் திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதமாக உடல்நலக் குறைவு காரணமாக சிக்கிசையில் இருந்த பிலிப்.
தனது வினஸ்டர் கேசில் உள்ள அரச மாளிகையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று பிலிப்பின் உயிர் பிரிந்தது. இங்கிலாந் அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,"