பல மாதங்களுக்கு பின்னர் அண்ணனை தொடர்பு கொண்ட இளவரசர் ஹரி
பிரித்தானிய அரச குடும்பத்தை கொந்தளிப்பில் ஆழ்த்திய ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு பிறகு முதன் முறையாக தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டுள்ளார் ஹரி. ஆனால் குறித்த தொலைபேசி உரையாடல் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்றே கூறப்படுகிறது.
குறித்த தகவலை மேகன் மெர்க்கலின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான கெய்ல் கிங் என்பவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியமுடன் ஹரி பேசியதே தற்போதைக்கு மகிழ்ச்சியான திருப்பம் என குறிப்பிட்டுள்ள கெய்ல் கிங், நாளடைவில் சகோதரர்கள் இடையேயான இறுக்கம் குறியும் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள் நீண்ட பல மாதங்களுக்கு பிறகு பேசத் தொடங்கியுள்ளனர் என்பதே மகிழ்ச்சியான தகவல் என கெய்ல் கிங் குறிப்பிட்டுள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலில் ஹரி- மேகன் மெர்க்கல் தம்பதி பிரித்தானிய அரச குடும்பம் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேகன் மெர்க்கலுக்கு பிறக்கும் பிள்ளைகளின் தோலின் நிறம் தொடர்பில் ஒரு அரச குடும்பத்து உறுப்பினர் கவலை தெரிவித்ததையும் அந்த நேர்காணலில் அவர்கள் அம்பலப்படுத்தினர்.
அப்படியான ஒரு சூழல் தம்மை தற்கொலைக்கு தூண்டியது என மேகன் மெர்க்கல் கண்கலங்கினார். மட்டுமின்றி, தமக்கு உரிய ஆதரவும் கிட்டாமல் போனது என மேகன் மெர்க்கல் குறிப்பிட்டார். அதேவேளை, தமது தந்தையும் சகோதரரும் அரச குடும்பத்தின் கட்டுப்பாடுகளில் சிக்கி, தங்கள் சுயத்தை இழந்து நிற்பதாக இளவரசர் ஹரி தமது கவலையை வெளிப்படுத்தினார்.
அரச குடும்பத்தினர் தம்மை புரிந்து கொள்ளாததும், தம்மை ஆதரிக்க மறுத்ததன் காரணமாகவே தாம் அரண்மனையை விட்டு வெளியேற முதன்மை காரணம் எனவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமது சகோதரர் வில்லியமை தாம் நேசிப்பதாக கூறிய ஹரி, இதுவரை எங்கள் அனுபவங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், ஆனால் எங்கள் பாதைகள் இருவேறானது என்றார்.
தங்கள் இருவருக்குமான உறவு தற்போது அந்தரத்தில் தொங்குவதாக குறிப்பிட்ட ஹரி, காலம் அனைத்து துயரங்களுக்கும் உரிய மருந்தை அளிக்கும் என்றார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan