பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றாரா? வெளியான பரபரப்பு தகவல்
ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஒசாமா பின்லேடன்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். 1988 ஆம் ஆண்டு அல்கொயதா இயக்கத்தை தொடங்கிய ஒசாமா அமெரிக்காவினை குறிவைத்து பல நாச வேலைகளை தனது இயக்கத்தின் மூலம் நடத்தி வந்தார்.
அமெரிக்காவின் வர்த்தகமையம் மற்றும் பெண்டகனை தாக்கிதன் மூலமாக உலக அரங்கில் அமெரிக்காவினால் அதி பயங்கரவாதியாக பார்க்கப்பட்டார் ஒசா பின்லேடன்.அல்கொய்தா இயக்கத்தை தொடங்கியவுடனே சவுதி அரசு அவரது குடியுரிமையினை ரத்து செய்தது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமாபின்லேடனை 2011 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிதி வாங்கிய சார்லஸ்
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு வரை ஒசாமா சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது சொந்த அறகட்டளைக்கு 3.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிக்கலில் அரண்மனை
இந்த நன்கொடையினை வாங்கியதற்கு முக்கிய காரணம் இளவர்சர் சார்லஸ் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒசாமா பின்லேடன் குடும்பத்தில் இருந்து எந்த நிதி உதவியும் வாங்கக் கூடாது என லண்டன் அரண்மனை நிர்வாகிகள் கூறிய போதும், சார்லஸ் நிதியினை பெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த செய்தி சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ள நிலையில் சார்லஸ் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
ஒசாமாவின் சகோதரர்கள் கட்டுமான தொழிலில் சவுதியில் பிரபலமானவர்கள், கட்டுமான தொழிலை செய்து வரும் இவர்கள் ஒசாமா அல்கொய்தா இயக்கத்தை தொடங்கியவுடனே அவரை ஒதுக்கி வைத்து விட்டனர்.
ஆகவே ஒசாமா சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக் வாழ்க்கை வேறு என கூறப்படுகிறது.