திருக்குறள், பாரதியாரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி - புதுச்சேரி கூட்டத்தில் பேச்சு

modi puducherry supporters
By Jon Mar 03, 2021 05:37 PM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்த பிரதமர். இன்று காலை 9 மணிக்குஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியின் ஜிப்மர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லாஸ்பேட்டையில் ரூ.12 கோடியில் 100 படுக்கைகளுடன் கூடிய வீராங்கனைகளுக்கான விடுதியையும், ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடாதுதான் கூடிய ரத்த வங்கியையும் திறந்து வைத்தார்.

பின்னர், புதுவை இந்திராகாந்தி விளையாட்டு திடலில் ரூ.7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் சாகர்மாலா திட்டத்தில் ரூ.44 கோடியில் சிறிய துறைமுகம் அமைக்கவும். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டிடத்திற்கும் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய சட்டநாதபுரம் – நாகை NH45A நெடுஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதிய நான்கு வழி சாலை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சுகாதாரத் துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.

மேலும் கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர் கூட்டத்தில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவ’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.