வெற்றி வேல், வீரவேல் என்று உரையை தொடங்கிய பிரதமர் - தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!
ட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இதனால் அக்கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பளாராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மற்றும் அண்ணாமலை ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வெற்றி வேல், வீரவேல் என்று பேச தொடங்கினார். அப்போது, பாஜகவினர் வெற்றி வேல், வீர வேல் என்று கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டவர்கள் வாழ்ந்த ஊர் இது. ஐ.நா சபையில் ஒரு சில வார்த்தைகள் தமிழ்மொழியில் பேசியதை பெருமையாக கருதுகிறேன். தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதில் உறுதி கொண்டுள்ளோம் என்பதை தெரிவித்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் தமிழக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.