அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் இணைப்பு - காஞ்சிபுரம் கலெக்டருக்கு பிரதமர் விருது அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு பிரதமர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பிரதமர் விருது
கிராமபுறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜல்ஜீவன் அமைப்பை கொண்டு வந்தது.
இதற்காக மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமபுறங்களில் உள்ள வீடுகளில் இந்த திட்டத்தின் கீழ் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசு பிரதமர் விருது அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பிரதமர் விருது வருகிற 21ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு வழங்க உள்ளார்.
பிரதமர் விருது பெறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ஐபிசி தமிழ்நாடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan