ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? திமுக எம்பிக்களை பார்த்து கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி
ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? என திமுக உறுப்பினர்களை பார்த்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
திமுக எம்.பிகளை பார்த்து கேள்வி எழுப்பிய பிரதமர்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சிகளை கலைத்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் என விமர்சித்தார்.

356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை 90 முறை கலைத்தது அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்ததது காங்கிரஸ் கட்சி தான்.
ஆட்சிகளை களைப்பதில் அரை சதம் அடித்தவர் இந்திரா காந்தி தான் என்றார்.
சரத் பவாரின் ஆட்சியை கலைத்த காங்கிரஸ் ஆந்திராவில் என்டிஆரின் ஆட்சியை கலைத்தது.
பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றனர். என ஆவேசமாக பேசினார்.
நாட்டில் ஏழை, எளிய மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் வலுவாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நான் மக்களுக்காக நிற்கிறேன் என்று பேசினார். அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிகள் மோடி மோடி என ஆதரவு குரல் எழுப்பினர்.