Wow... இந்திய ஐடி தொழிலாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஜெர்மன் பிரதமர்... - மகிழ்ச்சியில் மக்கள்...!
இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் பிரதமர், ஐடி தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வந்த ஜெர்மனி பிரதமர்
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு புதுடெல்லிக்கு வந்துள்ளார்.
கடந்த 25ம் தேதி வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸ், ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனையடுத்து, ராஷ்டிரபதி பவனில் அவரது சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்தியாவுடன் புதிய தொழில்நுட்பங்கள், சுத்தமான எரிசக்தி மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு மற்றும் புவி-அரசியல் பிரச்சினைகள் குறித்தும் ஷோல்ஸ் விவாதிக்க உள்ளார்.
பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குட் நியூஸ் சொன்ன ஜெர்மன் பிரதமர்
நேற்று பெங்களூரில் உள்ள SAP Labs India என்ற மென்பொருள் நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஜெர்மனியில் திறமையான தொழிலாளர்களாக பணிபுரிய இந்திய பலர் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். "வேலைவாய்ப்பின் அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு இது தேவை இருக்கிறது.
அதிலும், குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டில் நான் பார்த்த திறன்கள் எங்கள் நாட்டிற்கு தேவையாக உள்ளது. திறமையான தொழிலாளர்களுக்கான குடியேற்றத்திற்கான அதிகாரத்துவ தடைகளை குறைக்க உறுதியாக இருக்கிறேன்.
உங்கள் சொந்த குடும்பம் உட்பட ஜெர்மனிக்கு ஒரு நிபுணராக வருவதை எளிதாக்க உள்ளேன். நிறைய திறமைகள் மற்றும் திறன்களுடன் வருபவர்கள் ஜெர்மனிக்கு விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் ஒரு புதிய அமைப்பை நிறுவ விரும்புகிறேன்.
கூட்டணி அரசாங்கம் குடியேற்ற தடைகளை எளிதாக்க ஒரு வரைவு சட்டத்தின் இறுதி முடிவுகள் எடுக்க உள்ளேன் என்றார்.