பரபரப்புக்கு மத்தியில்..2வது முறையாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி!

Narendra Modi India Russia
By Vidhya Senthil Oct 22, 2024 04:07 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 2 நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி,  ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

 2 நாள் பயணம்

 ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

pm modi

 ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில்  பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுப் பிரதமர் மோடி டில்லியிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றார் .

உலக பிரச்சனைகளுக்கு தீர்வு இதில்தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு

உலக பிரச்சனைகளுக்கு தீர்வு இதில்தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு

  இதனை தொடர்ந்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.

பிரதமர் மோடி

 இதேபோன்று உச்சிமாநாடில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா - சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ரோந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

modi visit russia

 முன்னதாக 2 நாள் பயணமாக ரஷ்யா வந்த பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் இந்தியா – ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடதக்கது.