சர்வதேச யோகா தினம்.., பொதுமக்களுடன் யோகா செய்த பிரதமர் மோடி

Narendra Modi
By Yashini Jun 21, 2026 05:52 AM GMT
Report

12ஆவது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நரேந்திர மோடி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, "யோகா மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

யோகா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகளில் ஈடுபட்ட வங்காள மக்களையும் அவர் பாராட்டினார்.

மேலும், இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை நாடு முழுவதும் யோகாவின் ஆற்றலால் நிறைந்திருப்பதாகத் தோன்றுகிறது" என்றும் அவர் கூறினார்.