Sunday, Jul 13, 2025

குடியரசு தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு..!

Narendra Modi Draupadi Murmu
By Thahir 3 years ago
Report

நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பின் முதன் முறையாக நேரில் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு 

நேற்று இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Draupadi Murmu

நாட்டின் 2-வது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரௌபதி முர்மு. இதனிடையே குடியரசு தலைவராக பதிவியேற்ற பின் முதல்முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.