#Live; குடியரசு தலைவர் தேர்தல் முடிவுகள் - திரௌபதி முர்முவை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

Narendra Modi
By Thahir Jul 21, 2022 07:44 AM GMT
Report

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

கடந்த 18-ம்தேதி குடியரசுத் தலைவர் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றனர்.

President Election 2022

மாலை வாக்கில் இறுதிமுடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் வெற்றி பெறுபவர் வரும் 25-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார். இந்த தேர்தலில் திரௌபதி முர்முக்கு ஆதரவு அலை இருப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரான 50 ஆயிரம் லட்டுக்கள்

திரௌபதி முர்முக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரின் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். லட்டுக்கள் தயார் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Live; குடியரசு தலைவர் தேர்தல் முடிவுகள் - திரௌபதி முர்முவை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..! | Prime Minister Narendra Modi Meets Draupadi Murmu

பிரதமர் சந்திக்க வாய்ப்பு

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Narendra Modi